Sangakural is the monthly organ of Insurance Corporation Employees' Union, Thanjavur Division, a Divisional Body of All India Insurance Employees' Association.
தோழர் திரு.புண்ணியமூர்த்தி அனுப்பியிருந்த மின் அஞ்சலைக் கண்டேன். சிங்க நாதம் செய்யும் ' சங்கக்குரலினை" க்கண்டு படித்து வியந்தேன்.
1962 முதல் தஞ்சை தொழிற்சங்கத்தின் சரித்திரத்தை குறிப்பாகவும் சிறப்பாகவும் அழகாகவும், அழுத்தமாகவும் விவரிக்கும் தோழர் திரு கோவிந்தராஜன் அவர்களது கட்டுரை கண்டு அக்கால நினைவுகளில் அமிழ்ந்தேன்.
கொட்டும் மழையில் தஞ்சையில் நான்கு வீதிகளிலும் தோழர் உமா நாத் அவர்கள் முன்னின்று நடத்த தோழர் கோவிந்தராஜன் அவர்கள் தலைமையிலே சங்கம் நடத்திய ஊர்வலம் நினைவுக்கு வந்தது. உண்மையிலே சொல்லப்போனால், அந்த ஊர்வலம் தஞ்சை அதுவரை பார்த்திராத ஒரு தொழிலாளர் போராட்டம் ஆகும். உணர்வு பூர்வமான அந்த போராட்டம் ஒரு விதையாக வித்திடப்பட்டு, இன்றைய தஞ்சை கோட்ட இன்சூரன்சு கார்பொரேஷன் ஊழியர் சங்கம் ஒரு ஆலமரமாக பரிணமித்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நிற்க. தொழிற்சங்கச் செய்திகளுடன், இன்றைய பொருளாதாரம், அரசியல், ச்மூக, இலக்கிய நோக்குடன் அமைந்த கட்டுரைகளும் சங்கக்குரலில் அமைந்துள்ளது அதன் தனிச்சிறப்பாகும்.
தோழர் திரு.புண்ணியமூர்த்தி அனுப்பியிருந்த மின் அஞ்சலைக் கண்டேன்.
ReplyDeleteசிங்க நாதம் செய்யும் ' சங்கக்குரலினை" க்கண்டு படித்து வியந்தேன்.
1962 முதல் தஞ்சை தொழிற்சங்கத்தின் சரித்திரத்தை குறிப்பாகவும் சிறப்பாகவும்
அழகாகவும், அழுத்தமாகவும் விவரிக்கும் தோழர் திரு கோவிந்தராஜன் அவர்களது
கட்டுரை கண்டு அக்கால நினைவுகளில் அமிழ்ந்தேன்.
கொட்டும் மழையில் தஞ்சையில் நான்கு வீதிகளிலும் தோழர் உமா நாத் அவர்கள் முன்னின்று நடத்த
தோழர் கோவிந்தராஜன் அவர்கள் தலைமையிலே சங்கம் நடத்திய ஊர்வலம் நினைவுக்கு வந்தது.
உண்மையிலே சொல்லப்போனால், அந்த ஊர்வலம் தஞ்சை அதுவரை பார்த்திராத ஒரு தொழிலாளர் போராட்டம் ஆகும். உணர்வு பூர்வமான அந்த போராட்டம் ஒரு விதையாக வித்திடப்பட்டு, இன்றைய தஞ்சை கோட்ட இன்சூரன்சு
கார்பொரேஷன் ஊழியர் சங்கம் ஒரு ஆலமரமாக பரிணமித்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நிற்க.
தொழிற்சங்கச் செய்திகளுடன், இன்றைய பொருளாதாரம், அரசியல், ச்மூக, இலக்கிய நோக்குடன் அமைந்த
கட்டுரைகளும் சங்கக்குரலில் அமைந்துள்ளது அதன் தனிச்சிறப்பாகும்.
வாழ்க சங்கப்பணி.
சூரிய நாராயணன். எஸ்.